News September 27, 2025

புதுவையில் 2 பேரிடம் ரூ.4 லட்சம் சுருட்டல்

image

புதுவை குயவர்பாளையத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து, மணமகள் தேடியபோது அவரை தொடர்பு கொண்ட பெண்ணிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இதேபோல, டி.என்.பாளையத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஆன்லைனில் விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பது தொடர்பான விளம்பரத்தைப் பார்த்து ரூ.33,000 அனுப்பி ஏமாந்துள்ளார்.

Similar News

News February 12, 2026

புதுவை: இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

புதவை சேதராப்பட்டு – குரும்பாபேட் மின் பாதையில் இன்று (பிப்.12) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர் ஒரு பகுதி, EVR தெரு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று (பிப்.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

புதுச்சேரி: பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு

image

நெல்லித்தோப்பு பகுதிக்கு உட்பட்ட சக்தி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (68). இவர் கந்துவட்டியால் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கடனளித்தவர்கள், சித்ரா வீட்டில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2026

புதுச்சேரி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

புதுச்சேரி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!