News July 9, 2025
புதுவையில் விவசாய கூலி தொழிலாளி தற்கொலை

கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மாயவன். இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்ய முயன்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
புதுவை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

புதுவையில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 04132251691 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 24, 2025
விநாயகர் சதுர்த்தி; வழிகாட்டுதல் வெளியீடு

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில் வணிகர்கள், பொதுமக்கள். விழா குழுவினர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவில் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களால் ஆன அலங்கார பொருட்கள் மற்றும் நெகிழி பைகளை தவிர்த்து சுற்றுசூழலை பாதுகாக்குமாறும் ரசாயனம் பூசிய விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்
News August 24, 2025
புதுவை மக்களே உஷார்… போலீசார் எச்சரிக்கை!

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், App மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, உங்கள் புகைபடத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக உங்களுக்கு குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்து தருகிறோமென ஆசை வார்த்தை கூறினால் முதலீடு செய்யாதீர்கள் என எச்சரித்துள்ளனர். SHARE IT.