News March 1, 2025
புதுவையில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம்!

புதுவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கமால்பாஷா நேற்று (பிப்.28) வெளியிட்ட செய்தியில், இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில், கடந்த 24ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை, சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில், காப்பீடு திட்ட சிறப்பு முகாமை கால நீட்டிப்பு செய்யமாறு கேட்டுக்கொண்டனர். இதனால், மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
Similar News
News March 3, 2025
தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை போலீசார் விசாரணை

புதுவை, கோரிமேடு பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் சேதுராமன், மூலகுளம் தனியார் கல்லூரியில் படிக்கிறார். நேற்று முன்தினம் சேதுராமன், கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இரவு 10:30 மணிக்கு மேல் போனில் பேசிக்கொண்டிருந்ததை ரவி கண்டித்தார். இதனால், மனமுடைந்த சேதுராமன், தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 2, 2025
மின்சார நுகர்வோர் பேரணியில் பங்கேற்க புதுவை நிர்வாகிகள் டெல்லி பயணம்

அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் சார்பில் மின்துறை தனியார் மையத்தை கண்டித்து புதுடெல்லியில் வரும் 4,5 தேதிகளில் பேரணி கருத்தரங்கம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க புதுவை மின்சார நுகர்வோர் சங்க செயலாளர் சிவக்குமார் கமிட்டி உறுப்பினர் சண்முகம் ஆகியோர் இன்று ரயிலில் புது டெல்லி புறப்பட்டு சென்றனர். கருத்தரங்கில் புதுவை மாநில கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
News March 2, 2025
டிமிக்கி கொடுக்கும் அரசு ஊழியர்கள்! கணக்கெடுக்க உத்தரவு

புதுச்சேரி அரசின் அரசு துறைகளில் விடுமுறையில் சென்ற ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக தலைமை செயலர் சரத் சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, அரசு துறையில் நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவு போடப்பட்டுள்ளது.