News April 24, 2024
புதுவையில் ரேஷன் கடைகள் திறக்கப்படும்

காரைக்காலில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் வெற்றி பெற்றவுடன் புதுச்சேரி மாநிலத்தில் மூடி உள்ள ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து மாநில மக்களுக்கு இலவச அரிசிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
புதுவை: மருத்துவ படிப்பிற்கான பட்டியல் வெளியீடு!

புதுவை சென்டாக் இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவம், ஆயுர்வேதம் 47 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் 73 பேரும், பல்மருத்துவம், ஆயுர்வேதம் & கால்நடை மருத்துவம் 130 பேரும் இடம் பெற்றனர். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று (நவ.18) தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 47.6 மி.மீ. மழை பொழிவு

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் உப்பளம், ரெட்டியார் பாளையம், உருளையன்பேட்டை, நெல்லிதோப்பில் கனமழை பெய்தது. நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 47.6 மி.மீ., (4.76 செ.மீ.) மழை பதிவானது.