News March 28, 2024

புதுவையில் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்

image

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சாலையில் பறக்கும்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையை மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.7 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

Similar News

News November 7, 2025

புதுவை: நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்

image

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட மோர்சார் தெரு, குட்டவாப்பு தெரு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மோட்டார் சைக்கிளில் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 3 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2025

புதுச்சேரி: வனக்காப்பாளர் பணியில் இருந்து விடுவிப்பு

image

புதுச்சேரி அரசின் தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரி வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதுவை அரசு பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் சவுகான் தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!

error: Content is protected !!