News January 9, 2025
புதுவையில் ரூ.40 லட்சம் மோசடி
புதுச்சேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன். மருத்துவ கல்லுாரியில் சீட்டு தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். அதில் விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். பேசிய நபர் தனது பெயர் வெங்கடேசன் எனவும் மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறினார். அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு 40 லட்சம் முன்பணம் அனுப்பி ஏமாந்துள்ளார். நேற்று சைபர் கிரைம் போலீசில் இமெயில் மூலம் புகாரளித்தார்.
Similar News
News January 9, 2025
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் 10 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் மற்றும் படகை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய மத்திய வெளியுவுத்துறை அமைச்சருக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
News January 9, 2025
எச்.எம்.பி.வி., நோய் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம்
புதுச்சேரி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்.எம்.பி.வி., நோய் பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இது நீண்டகாலமாகவே உள்ளது புதுச்சேரியில் பாதிப்பு இல்லை. சுவாச நோய் தொடர்பாக நோயாளிகள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரியில் தற்போது ஆய்வக பரிசோதனை வசதி மற்றும் சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
News January 9, 2025
‘திராவிட ஒழிப்பும், பெரியார் எதிர்ப்பும்’ எனது கொள்கை – சீமான்
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அவர் இன்று புதுச்சேரி கீர்த்தி மகாலில்விளக்கம் அளித்தார். தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி மொழி’ நீங்கள் எழுதியது, பேசியது எந்த மொழியில்? இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்று பேசியிருக்கிறார் பெரியார்.திராவிடத்தை ஒழிப்பதும், பெரியாரை எதிர்ப்பதும் தான் எனது என்றார்