News March 27, 2025

புதுவையில் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் தெரியுமா?

image

புதுவை மதகடிப்பட்டில் குண்டாங்குழி எனும் குளக்கரையில் அமைந்ததுள்ளதால் இங்குள்ள மூலவர் குண்டாங்குழி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி. 985-இலிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இங்கு முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. SHARE செய்யவும்

Similar News

News March 31, 2025

புதுச்சேரி ஆளுநர் ரமலான் வாழ்த்துச் செய்தி

image

புனித ரமலான் நோன்பு சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ, உணர்வு வளரவும், எளிமை, அன்பு ஆகிய பண்புகளோடு அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டுகிறது.ரமலான் நோன்பின் பயனாக அனைவரது வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் இறைவன் அருள் புரியட்டும் என புதுவையில் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும அனைவருக்கும் ஆளுநர் மனமார்ந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

நவபாஷாண சித்தர் கோயிலில் திருவாசக முற்றோதல்

image

வில்லியனூரை அடுத்துள்ள சந்தி குப்பத்தில் அமைந்துள்ள சத்குரு நவபாஷாண சித்தர் ஆலயத்தில் சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியினை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் மருதமலை அப்பன் சிறப்பாக செய்திருந்தனர். முற்றோதல் நிகழ்ச்சி முடிந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஊர் பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

News March 30, 2025

புதுவை முதலமைச்சரின் ரமலான் வாழ்த்து செய்தி

image

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், ரமலானின் மறைபொருளானது, நோன்புடன் தீவிர பக்தியில் ஈடுபடுவதையும், மனத்தூய்மை, பொறுமை, சுய ஒழுக்கத்தைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோன்பின் பிரார்த்தனைகள், உங்கள் வாழ்வில் அன்பு, சகோதரத்துவம், ஈகை, வலிமை மற்றும் வளமான வாழ்வைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். அனைவருக்கும் எனது அன்பான ரமலான் நல்வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்

error: Content is protected !!