News April 25, 2025

புதுவையில் ரவுடிகளின் மனைவிகள் கைது

image

ஒதியஞ்சாலை பகுதியில் வசிக்கும் மின்துறை அதிகாரி பன்னீர்செல்வம் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அவரை அந்தப் பெண், அவரது தோழிகளுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம், பழைய பூரணாங்குப்பத்தை சேர்ந்த மணிமேகலை, பெரம்பை சுகந்தி, வாணரப்பேட்டை அம்மு என்பதும், 3 பேரும் ரவுடிகளின் மனைவிகள் என்பதும் தெரியவந்ததையடுத்து, அவர்களை கைது செய்துள்ளனர்.

Similar News

News August 25, 2025

புதுச்சேரி: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

image

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News August 25, 2025

வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

image

புதுச்சேரி அரசு வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

News August 25, 2025

புதுச்சேரி: காவல்துறையில் வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 உதவி காவல் ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்டம்பர் 12ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!