News March 26, 2025

புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடு – அமைச்சர் அறிவிப்பு

image

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் இந்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விளக்குகளும் LED விளக்குகளாக மாற்றப்படும். மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.

Similar News

News October 26, 2025

புதுச்சேரி: 10th போதும்! அரசு வேலை ரெடி!

image

Eklavya Model Residential Schools-யில் (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 26, 2025

புதுச்சேரி: 44 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

image

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், நேற்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 66 புகார்கள் பெறப்பட்டு, 44 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2025

ஏனாம் பகுதிக்கு 3 நாட்கள் விடுமுறை

image

மோன்தா புயல் எதிரொலி காரணமாக ஆந்திராவின் காக்கிநாடா அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 27 முதல் 29 வரை 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!