News May 7, 2024
புதுவையில் நாளை குடிநீர் சப்ளை ரத்து

ஒட்டம்பாளையத்தில் உள்ள கொம்பாக்கம் நீர்த்தேக்க தொட்டி கழுவும் பணிகள் நாளை நடக்கிறது.எனவே நாளை (ஏப்ரல்.8) மதியம் 12-2 கொம்பாக்கம், பாப்பாஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், அதேபோல் முதலியார்பேட்டை, தேங்காய்த்திட்டு நீர்த்தேக்க தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (ஏப்ரல்.9)மதியம் 12 – 2 வரை தேங்காய்த்திட்டு அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் தடைபடும்.
Similar News
News April 20, 2025
புதுச்சேரி: மின்சாரம் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

புதுச்சேரி மின்சாரத் துறை, மக்களிடம் இருந்து புகார் அளிக்கும் முறைகளை எளிதாக்கி, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வருகிறது. அதன்படி புதுவைக்கு – 04132334277, காரைக்காலுக்கு – 04368 222 428 என்ற எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் அல்லது மின்சாரத் துறை இணையதளம் http://electricity.py.gov.in மூலம் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
News April 20, 2025
இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News April 20, 2025
புதுவை: வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

வில்லியனூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தரராஜன். இவர், குடிப்பழக்கம் உள்ள நிலையில், வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாகவும், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நேற்று காலை அதே பகுதி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.