News March 6, 2025

புதுவையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சேவை மையம் சார்பில் தனியார் நிறுவனங்களில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் அலுவலகத்தில் மார்ச்.08 காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்கலந்துகொண்டு பயனடையலாம்.

Similar News

News August 30, 2025

வரும் எட்டாம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை

image

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுவையில் மின்துறையைத் தனியாரிடம் கொடுத்த முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் நமச்சிவாயம் மற்றும் பிற அமைச்சா்களும் உடனடியாக பதவி விலக வேண்டும். வரும் செப்டம்பா் 8 ஆம் தேதி INDIA கூட்டணிக் கட்சி சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். முக்கிய நகரப் பகுதிகளில் தீ பந்த ஊா்வலம் நடைபெறும்.” என தெரிவித்துள்ளனர்.

News August 30, 2025

புதுச்சேரி காவல்துறையில் வேலை-APPLY NOW!

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அரசு வேலை தேடும் அனைவருக்கும் SHARE செய்ங்க…

News August 30, 2025

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்!

image

“புதுச்சேரியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் சாரம் அவ்வை திடலில் இருந்து ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கும் முக்கிய நிகழ்ச்சி 31-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சில தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.” என புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரஞ்சனா சிங் அறிவித்துள்ளார். SHARE IT…

error: Content is protected !!