News April 10, 2024
புதுவையில் தங்க நகைகள் பறிமுதல்

புதுவை கோரிமேடு எல்லைப் பகுதியில் நேற்று மாலை தன்வந்திரி காவல் நிலைய போலீஸாா் உதவியுடன் தோ்தல் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சென்னையில் பிரபல நகை தயாரிப்பு மினி வேன் வந்தது. அதைச் சோதனையிட்டபோது சரியான ஆவணங்கள் இல்லாததால் 50.56 லட்சம் மதிப்புள்ள 1.141 கிலோ தங்கநகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மாவட்ட உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 11, 2026
புதுச்சேரி: காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த, 148 காவலர் பணியிடங்களுக்கான (ஆண்கள் – 100, பெண்கள் – 48) எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்விற்கான முடிவுகள் recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமான சான்றிதழ் சரிபார்ப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
புதுச்சேரி: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 11, 2026
புதுச்சேரி: லாரி உரிமையாளர் வீட்டில் பணம், நகை திருட்டு

புதுச்சேரி, துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகாந்த் என்பவரது வீட்டில், ரூ.10 லட்சம் மதிப்பிலான ஏழரை பவுன் நகை மற்றும் 80,000 ரூபாய் பணம் திருடு போனது. வீட்டின் சாவியை வழக்கமாக வைக்கும் இடத்திலிருந்து எடுத்த மர்ம நபர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


