News March 30, 2025
புதுவையில் டாக்டரிடம் ரூ.48 லட்சம் மோசடி!

புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். மருத்துவராக பணியாற்றி வரும் இவர், ஆன்லைன் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை தேடியுள்ளார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறியுள்ளனர். அதை கேட்டு ரூ. 48 லட்சம் அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து மருத்துவர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
புதுச்சேரி: கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News February 7, 2026
புதுச்சேரி: NR காங்கிரஸ் கட்சியின் துவக்க விழா

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழா இன்று உற்சாகமாக நடைபெற்றது. விழாவை கட்சியின் நிறுவனத் தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி, கட்சி கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் தொடர்ந்து பாடுபடுவோம் என உறுதி அளித்தனர்.
News February 7, 2026
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச மாநாடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதிநவீன விபத்து சிகிச்சை குறித்த சர்வதேச உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு, நவீன சிகிச்சை முறைகள் குறித்து கருத்துப் பகிர்வு செய்தனர்.


