News November 11, 2025
புதுவையில் குட்கா விற்ற பெண் கைது

திருபுவனை அடுத்த கொத்தபுரிநத்தம் சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், திருபுவனை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் 1150 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் ஜெயலட்சுமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் திருவாண்டார்கோயில் கொத்தபுரிநத்தம் சாலை, சன்னியாசி குப்பம் சாலை உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
Similar News
News November 11, 2025
புதுவை பல்கலைக்கழக Phd., சேர்க்கை அறிவிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் Phd., படிப்புகள், நுழைவு தேர்வு மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் 12-ம் தேதி முதல் டிச.30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள், சிற்றேடை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என புதுவை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
News November 11, 2025
புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி ரயில் நிலையத்தில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
News November 11, 2025
புதுவையில் மூதாட்டி தற்கொலை-போலீசார் விசாரணை

வில்லியனுார், தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மனைவி வச்சலா. இவர் கடந்த சில ஆண்டுகளாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது உடல் நிலை மோசமானதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வச்சலாவிற்கு திடீர் என வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த வச்சலா நேற்று இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


