News December 19, 2025
புதுவையில் ஊக்கத் தொகை உயர்வு!

புதுச்சேரியில், 1 அல்லது 2 பெண் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கும் ஊக்கத் தொகை தரப்படுகிறது. இதில் குறிப்பாக ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை தற்போது ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என புதுவை அரசு சார்பாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
புதுவை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: https://voters.eci.gov.in/
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 20, 2025
புதுவை: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
புதுவை: கூலி தொழிலாளி ஏரியில் மூழ்கி இறப்பு

பி.எஸ்.பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அய்யனார்(59). சம்பவத்தன்று இவர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது, ஏரியில் மூழ்கியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சையில் இருந்த அய்யனார் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


