News April 26, 2025

புதுவையில் உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு

image

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Similar News

News August 11, 2025

புதுச்சேரி மக்களே… இனி ரேஷன் அட்டை பெறுவது எளிது!

image

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மக்களுக்கு குட் நியூஸ். இனி ரேஷன் அட்டை சேவைகளை வருகிற ஆக.18ம் தேதி முதல் பொதுசேவை மையங்கள் மூலம் பெற முடியும். இதனை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர்ப் சத்யமூர்த்தி செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார். இனி சுலபமாக குடும்ப அட்டைகளை பெறலாம்..! இதை அனைவர்க்கும் SHARE பண்ணுங்க..!

News August 11, 2025

மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கிய சபாநாயகர்

image

புதுச்சேரி, மணவெளியில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால் அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தவளக்குப்பம் பள்ளியில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூபாய் 10,000 வழங்கினார்.

News August 11, 2025

புதுவை: ரூ.34,800 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

image

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள 446 செவிலியர்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிப்பட்ட பல்கலைகழகத்தில் B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக மாதம் ரூ.34,800 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் jipmer.edu.in என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!