News November 4, 2025
புதுவையில் இன்று மின் தடை அறிவிப்பு

புதுவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மரப்பாலம் துணை மின் நிலையம், கோர்க்காடு துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் இன்று (நவ.04) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அந்த வகையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 வரை தில்லையாடி, வித்யாலயா நகர், தியாகி சுப்புராயன் நகர், இந்திரா நகர் மற்றும் இன்னும் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கொடிகள் வரும் 6-ம் தேதி முதல் அகற்றப்படும். ஆகவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
பாகூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்ற கலெக்டர் குலோத்துங்கன், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்தும், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்து, பொது மக்களிடம் மருத்துவ சேவை குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, பாகூரில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்தார்களா, என ஆய்வு செய்தார்.
News November 4, 2025
புதுவை: சமூக ஆர்வலர்க்கு கொலை மிரட்டல்

புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோகுல் காந்திநாத். இவர் நேற்று முன்தினம் கொக்கு பார்க் அருகே தண்ணீர் குழாயில், தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே இறைச்சி கழிவுகள் கிடந்துள்ளது. உடனே அருகில், இருந்த இறைச்சி கடையில் இருந்த ஒருவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, டி.நகர் காவல் நிலையத்தில் கோகுல் புகார் அளித்துள்ளார்.


