News January 21, 2026

புதுவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

புதுவை லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (21-01-2026) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவ்வை நகரின் ஒரு பகுதி, ராஜாஜி நகர், அசோக் நகரின் ஒரு பகுதி மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று புதுச்சேரி மின்வாரியம் அறிவித்துள்ளது.

Similar News

News February 5, 2026

தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் புதுச்சேரி எம்பி

image

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஒதுக்கீடு நிலைக்குழு உறுப்பினர்கள், புது தில்லியில் இந்திய மத்திய அரசின் நிதி நிலைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர். இரு நாடுகளின் நிதி மேலாண்மை மற்றும் நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த நிகழ்வில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி கலந்துகொண்டார்.

News February 5, 2026

புதுச்சேரி: மலைக்க வைக்கும் புதுச்சேரி வீராங்கனை

image

புதுச்சேரியின் கூனிச்சம்பட்டு பகுதி திவ்யா (29), ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான, ரஷ்யாவின் காகசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள எல்ப்ரஸ் சிகரத்தில் 5,642 மீட்டர் உயரம் ஏறி அசத்தி, ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையில் ஏறிய முதல் புதுச்சேரி பெண் என்ற பெருமையை திவ்யா பெற்றார். அடுத்து கார்கிலில் உள்ள மவுண்ட் குன் மலை சிகரத்திலும் 7,077 மீட்டர் உயரம் ஏறி வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

News February 5, 2026

புதுச்சேரி: ரூ.50,500 சம்பளத்தில் – அரசு வேலை

image

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900-ரூ.50,500
5. கல்வித்தகுதி:B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!