News June 7, 2024
புதுவண்ணாரப்பேட்டை அருகே விபத்தில் ஒருவர் பலி!

புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் டிஎச் சாலையில் நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது, பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி வந்த பேருந்து மோதியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் இறந்தவரின் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
சென்னை: ஜூஸில் கிடந்த பூரான்!

காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (27). இவர் ராமாபுரத்தில் உள்ள டீக்கடையில் தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குதித்துள்ளார். அந்த ஜூஸில், உயிருடன் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்காரர் உரிய பதில் அளிக்காததால், அவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News February 8, 2026
சென்னை: வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

கடந்த 2020ம் ஆண்டு இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்கலான வழிப்பறி வழக்கில் தீலிப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் சென்றவர் சைதாப்பேட்டை, 18-வது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் ராயப்பேட்டை போலீசார் திருவல்லிக்கேணி பி.எம் தர்காவை சேர்ந்த தீலிப்குமார் (29) என்பவரை நேற்று கைது செய்தனர்.