News May 18, 2024

புதுமைப் பெண் திட்டத்தில் 6485 பேர் பயன்!

image

மதுரை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6,485 மாணவியர்கள் மாதந்தோறும் ரூபாய் 1000 பெற்று பயனடைந்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டு தகுதியான மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

மதுரை: அகில இந்திய அளவில் சாதனை படைத்த மாணவி

image

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மார்ச்.6) வெளியாகியுள்ளன. இதில் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடத்தையும், ஆகாஷ் துல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜேஸ்வரி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்வர் என்பது குறிப்பிடத்தக்கது

News March 6, 2026

மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News March 6, 2026

FLASH மதுரை: மின்சாரம் தாக்கி தந்தை & மகன் பலி

image

வாடிப்பட்டி, நாராயணபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி(79). இவரது மகன் அரசு பஸ் டிரைவர் ஆதிநாராயணன்(55) இவரது தம்பி மகன் கல்லூரி மாணவர் கிருஷ்ணன்(20). 3 பேரும் தோட்டத்தில் மாட்டு தீவனம் சேகரித்த போது மின்சார வயர் அறுந்து கிருஷ்ணனின் மேல் விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற மற்ற இருவர் உள்பட 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் ஆதிநாராயணன் & கிருஷ்ணன் பலியாயினர். சின்னதம்பி சிகிச்சையில் உள்ளார்.

error: Content is protected !!