News August 10, 2025
புதுமைப் பெண் திட்டத்தின் 33,663 மாணவர்கள் பயன்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 22,087 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 11,576 மாணவர்களும் என மொத்தம் 33,663 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ் தெரிவித்துள்ளார். 2025-2026-ஆம் கல்வியாண்டில் மட்டும் 76 கல்லூரிகளில் 11,554 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
Similar News
News August 13, 2025
தர்மபுரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையரின் அறிவுரைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில் பொதுமக்கள், வாக்காளர்கள், மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார்.
News August 12, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக R. குணவர்மன்
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதமலி, பென்னாகரம் முரளி , மற்றும் பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
தர்மபுரி மாணவர்கள் கவனத்திற்கு!

தருமபுரி, காரிமங்கலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 இலவச பேருந்து பாஸ், புத்தகங்கள், பாடக் கருவிகள், சீருடைகள், ஷூ,மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும். குறைந்த இடங்களே உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.