News December 31, 2024

புதுமைப்பெண் திட்டத்தில் 9,340 மாணவிகளுக்கு நிதி

image

தமிழ்நாடு முழுவதும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தொடங்கி வைத்தார். மேலும், புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து 62 கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயிலும் 9,340 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Similar News

News August 9, 2025

கிருஷ்ணகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.

News August 9, 2025

கூகுள் மேப் மூலம் வந்தவருக்கு நேர்ந்த கதி

image

ஓசூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மேம்பாலம் பழுதானதால் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி மற்றும் கனரக வாகனங்கள் வேறு வழியில் செல்கின்றன. இந்நிலையில் மேட்டூரில் இருந்து மூன்று சிமெண்ட் கலவை டேங்கர் லாரி, கூகுள் மேப் மூலம் ராயக்கோட்டை சாலை வழியாக நகருக்குள் புகுந்து மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் சேதமடைந்து கீழே விழுந்தது.

News August 9, 2025

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசு வேலை… கடைசி வாய்ப்பு

image

இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை (ஆக.10)க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!