News April 6, 2024

புதுப்பிக்க தக்க வணிகரீதியான கருத்தரங்கம்.

image

திருச்சி எம் ஐ இ டி பொறியியல் கல்லூரியில் நேற்று ,மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல்களின் வணிக ரீதியான பயன்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது .எம் ஐ இ டி கல்வி நிறுவனங்களின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் நவீன் சேட் வரவேற்றார், இதில் துணைத் தலைவர் முத்துக்குமரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

Similar News

News September 19, 2025

திருச்சியில் மருத்துவருடன் ஒரு நாள் நிகழ்ச்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வரும் 21-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை, ‘மருத்துவருடன் ஒரு நாள்’ நிகழ்ச்சியில், ‘குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி’ என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் சிறப்புரையாற்றி, கலந்துரையாடுகிறார். இதில், பொதுமக்கள், வாசகர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ள மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 19, 2025

திருச்சி: IIM-இல் வேலை வாய்ப்பு

image

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் (1), செகரட்டரியல் அசிஸ்டன்ட்(1), எக்ஸிக்யூட்டிவ் அசிஸ்டன்ட் (1), மெயின்டனன்ஸ் டெக்னீசியன் (1), இன்ஜினியரிங் டிரெய்னீ (1) உட்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>www.iimtrichy.ac.in/career<<>> என்ற இணைதளம் மூலமாக வரும் செப்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

திருச்சி மைய நூலகத்தில் யோகா பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், வரும் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியில், மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர் முருகேஸ்வரி பயிற்சி அளிக்க உள்ளார். நுாலகத்தில், ஏற்கனவே வியாழக்கிழமை தோறும் நடந்து வந்த இப்பயிற்சி இனி சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறும் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!