News February 22, 2026
புதுச்சேரி : Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

புதுச்சேரி மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT!
Similar News
News March 1, 2026
புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி

புதுச்சேரி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் அரசு சார்பில் இன்று (மார்ச் 1) நடக்கும் விழாவில், புதுச்சேரியில் உள்கட்டமைப்பு, நகர்ப்புற சேவைகள், தொழில்துறை மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு ரூ.2700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
News March 1, 2026
புதுச்சேரியில் ரூ.1.23 கோடி மோசடி

புதுச்சேரி, பாகூரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்காலம் எனக் கூறி மர்மநபர் அனுப்பிய ஆன்லைன் வர்த்தக லிங்கில், பல்வேறு தவணைகளாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
புதுச்சேரியில் போக்குவரத்து தடை அறிவிப்பு

பிரதமர் மோடி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி, லாஸ்பேட்டை பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவையற்ற வாகனங்கள் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் விழாவிற்கு வரும் வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களும் இயக்கவோ, நிறுத்தவோ தடை விதிக்கப்பட்டது.


