News September 11, 2025
புதுச்சேரி: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டா? Call Now

புதுச்சேரி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
வி.ஏ.ஓ போட்டி தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்!

புதுச்சேரி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 41 கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான போட்டி தேர்வு, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகே, மற்றும் ஏனாம் பகுதிகளில் மொத்தம் 86 தேர்வு மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை, தேர்வர்கள் htttp://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று 11ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
News September 11, 2025
புதுவை ரெப்கோ வங்கியில் அடமான கடன் முகாம்

புதுவை, ரெப்கோ வங்கியில் அடமானக் கடன் முகாம் வரும் 30ம் தேதி நடக்கிறது. நேற்று நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு வங்கியின் கூடுதல் பொது மேலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் வியாபார அபிவிருத்தி, வீடு வாங்க, கட்டுமானம், பராமரிப்பு, திருமண செலவு, அனைத்து குடும்ப தேவைகள், பிற வங்கியில் உள்ள கடனை மாற்றி அதிகப்படியான கடன் பெறுதல், அனைத்து தேவைகளுக்கும் கடன் வழங்கப்படுகிறது.
News September 11, 2025
புதுவை: பி.டெக். படிப்புக்கு 17ஆம் தேதி நேரடி சேர்க்கை

புதுவை பல்கலைக்கழக பதிவாளர் ரஜ்னீஷ் பூடானி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுவை பல்கலைக் கழகத்தில் கியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பி.டெக் எனர்ஜி சயின்ஸ், மெட்டீரியல் சயின்ஸ் படிப்புகளில் காலியாக உள்ள இடங்கள் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் 17ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க