News December 22, 2025

புதுச்சேரி AISF மாநில விரிவடைந்த குழுக்கூட்டம்

image

புதுச்சேரி, அனைத்திந்திய மாணவர் பேரவை (AISF) மாநில விரிவடைந்த குழுக்கூட்டம், மாநிலத் தலைவர் வி.உதயராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் மூடப்பட்டதையும், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சில பேராசிரியர்கள் RSS மற்றும் ABVP போன்ற அமைப்புகளில் பங்கேற்பதையும் கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

Similar News

News December 24, 2025

உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை

image

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கடந்த ஆக.14ஆம் தேதி முதல் புதன்கிழமைகள் தோறும் 9.30 – 11.30 வரை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் ரூ.150 செலுத்தினால் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. உரிமம் இல்லாமல் நாய்களை வளர்த்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 24, 2025

புதுவை: மாணவர்களுக்கு உதவி செய்த அமைச்சர்

image

இன்று புதுவை மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு, ஜூடோ போட்டிக்கு செல்ல இருக்கும் மாணவர்கள், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்பொழுது மாணவர்களின் பயண செலவிற்காக ரூ.10,000 வழங்கினார். நிகழ்வின் போது பல மாணவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

News December 24, 2025

புதுவையில் 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

புதுச்சேரி காவல் தலைமையகம் எஸ்பி மோகன்குமார் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், மேற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் சண்முகம், காரைக்கால் போக்குவரத்து டவுன் காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி திருநள்ளாறு காவல் நிலையத் துக்கும், திருநள்ளாறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார் மேற்கு போக்குவரத்துக்கும் இட மாற்றம் செய்யப்பட்டனர்.

error: Content is protected !!