News August 9, 2024
புதுச்சேரி: 62 பவுன் தங்கம் கொள்ளை; 7 பேர் கைது

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி ஜூலை 22-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் கனகவள்ளியை தாக்கி 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 25, 2026
புதுச்சேரி: மின் நுகர்வோர் குறைதீர் முகாம் அறிவிப்பு

காரைக்காலில் மின்சார சட்டம் 2003 விதிகளின் கீழ் யூனியன் பிரதேசங்கள் மற்றும் கோவா மாநிலத்தின் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நுகர்வோர் குறைதீர் அவை இன்று (25.02.2026) நடைபெறவுள்ளது. காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், நுகர்வோர் குறைபாடுகள் சம்பந்தமாக நேரடியாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2026
புதுவை: கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலத்த காயம்

தவளக்குப்பம் அருகிலுள்ள நல்லவாடு வடக்குத்தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (28) தலைமையில் 5 பேர் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக எழுந்த பெரிய அலையில் படகு கவிழ்ந்து, அனைவரும் கடலில் விழுந்துள்ளனர். இதில் சதீஷ் என்பவர் பலத்த காயம் அடைந்தார். மற்றவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். இது குறித்து தவளக்குப்பம் போலீசார் மற்றும் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 25, 2026
புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் (UAV) மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுவோருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


