News October 27, 2025

புதுச்சேரி: 6 வழக்குகளில் ரூ.14 லட்சம் இழப்பீடு

image

புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தின் மக்கள் நீதிமன்றம் நேற்று ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் நடந்தது. இந்த அமர்வில் 14 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்படி ரூபாய் 14 லட்சத்து 72 ஆயிரத்து 834 இழப்பீடாக வழங்கப்பட்டது. இதில் புதுச்சேரி வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Similar News

News October 27, 2025

மத்திய அமைச்சவுடன் உள்துறை அமைச்சர் சந்திப்பு

image

புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை, நேற்று (அக்.26) புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் இல்லத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.

News October 27, 2025

புதுச்சேரி: தாய் கழுத்தை அறுத்த மகன்

image

புதுச்சேரி, பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், இவரது மனைவி லோகநாயகி கணவர் இறந்து விட்டதால், அவரது மகன்கள் ராஜ்குமார், சந்தானம், ஆகியோருடன் வசித்து வந்தார். மதுபோதையில் வீட்டிற்கு வந்த மூத்த மகன் ராஜ்குமார், தாய் லோகநாயகியிடம் சொத்தை தனக்கு எழுதி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு லோகநாயகி மறுக்கவே தாயை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்தனர்.

News October 27, 2025

புதுச்சேரி: விடுதலை நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

image

புதுச்சேரியில் விடுதலை நாள் விழா வரும் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல்வர் ரங்கசாமி கடற்கரை காந்தி திடலில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி, விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலை காந்தி திடல் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இரவு பகலாக ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!