News March 15, 2026

புதுச்சேரி: 388 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

image

புதுச்சேரி தேர்வு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுவையில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள எல்டிசி, யுடிசி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 388 பணியிடங்களை நிரப்புவதற்கு புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வரும் வருகிற 23ம்தேதி, காலை 10 மணி முதல் ஏப்.14ம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 8, 2026

கருத்துக்கணிப்புக்கு தடை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

image

தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Poll) வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு நாளை முதல் அமலில் வந்து, வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

புதுவை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

புதுவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 8, 2026

புதுச்சேரியில் ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

image

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.69 லட்சம் பணம், ரூ.61.37 லட்சம் மதிப்புள்ள மதுபானம், ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!