News August 31, 2025

புதுச்சேரி: 31 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை

image

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தல் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி, பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 52 புகார்கள் பெறப்பட்டு 31 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Similar News

News August 31, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை!

image

புதுச்சேரி இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 31, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், ஆப் மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, உங்களுடைய புகைபடங்களை பெற்று கொண்டு ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ்ஆப் மூலமாக ஏதேனும் லிங்க், மெசேஜ் வந்தால் அதனை லிங்க் செய்ய வேண்டாமென தெரிவித்துள்ளனர்.

News August 31, 2025

புதுவையில் பள்ளி மாணவர்கள் சைக்கிள் ஊர்வலம்

image

புதுச்சேரி அரசு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய விளையாட்டு தினம் இன்று (ஆகஸ்ட் 31) கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய விளையாட்டு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்களின் சைக்கிள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!