News September 10, 2025
புதுச்சேரி 3 ஆம் இடம், எதில் தெரியுமா?

புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆண்டுதோறும் செப்டம்பா் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக தற்கொலை தடுப்பு நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-வரை தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
Similar News
News April 8, 2026
புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.