News January 8, 2026

புதுச்சேரி: 24 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

image

புதுச்சேரியில் நடந்த போலி மருந்து வழக்கில், சிபிசிஐடி போலீசார் கைது செய்த 24 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தியதாகக் கூறப்படும் உரிமையாளர் மதுரை ராஜா, ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உள்பட மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் ராஜாவின் கூட்டாளிகள் ராணா மற்றும் மெய்யப்பன் ஏற்கனவே ஜாமீன் பெற்றிருந்தனர்.

Similar News

News January 10, 2026

புதுச்சேரி: கவலை நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

image

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 10, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!

News January 10, 2026

புதுவை: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

புதுவை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!