News October 27, 2024

புதுச்சேரி 12 தாசில்தார்களுக்க பதவி உயர்வு

image

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பணியாற்றி வரும் 11 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. மேலும் 12 துணை தாசில்தார்களுக்கு தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.. இதற்கான உத்தரவை புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் வருவாய் துறை சிறப்பு செயலாருமான குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.

Similar News

News September 14, 2025

புதுவை: கடுமையான வயிற்று வலியால் தற்கொலை

image

புதுவை, கூடப்பாக்கம்பேட் கோபால் (65) இவருக்கு 3 வாரமாக கடுமையான வயிற்று வலி இருந்தது அவர் மகன் கோவிந்தன் அவரை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று கோவிந்தன் வேலைக்கு சென்ற நேரத்தில் வயிற்று வலியால் விரக்தியடைந்த கோபால் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த கோவிந்தன் அளித்த புகாரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 13, 2025

காரைக்காலில் ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை, கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை இணைப்பு சாலைக்கான முதற்கட்ட கல ஆய்வு பணிகளை ஆட்சியர் மேற்கொண்டார். இணைப்பு சாலைகளுக்கு தேவையான முன் கள ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தினார்.

News September 13, 2025

புதுவை: 500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்!

image

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு தேவையான முட்டை, கொண்டைக்கடலை, சத்துமாவு வழங்கப்படுகிறது. புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!