News November 22, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News November 24, 2025
புதுவை: இளம் பெண் தற்கொலை

புதுவை, முதலியார்பேட்டை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, இவர் தனியார் பள்ளி ஆசிரியர், இவரது மூத்த மகள் பவித்ரா என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு வேலைக்காக போட்டி தேர்வு எழுதி வந்தார். இந்தநிலையில் மேல்நிலை, இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர்.
News November 24, 2025
புதுச்சேரி: சீமான் மீது புகார் அளித்த நிருபர்

புதுச்சேரி வில்லியனூரில், நேற்று (நவ.23) நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்ட கலைஞர் டிவி நிருபர் ராஜீவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வில்லியனூர் காவல் நிலையத்தில் பத்திரிக்கை சங்க சக நிருபர்களுடன் சென்று நாம் தமிழர் கட்சி சீமான் மீதும், அவரது கட்சியின் மீதும் புகார் அளித்துள்ளார்.
News November 24, 2025
புதுச்சேரி: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

புதுச்சேரி, தவளகுப்பத்தை அடுத்த தானம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பெரியமதகு திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஷ்வா, இன்ஸ்டாகிராம் மூலம் அந்தச் சிறுமியுடன் பழகியுள்ளாா். பின்னர் அந்த சிறுமியை அவர் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் அளித்த புகார் படி தவளக்குப்பம் போலீசார் விஷ்வாவை, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


