News September 9, 2025

புதுச்சேரி: வெளியானது கலந்தாய்வு பட்டியல்

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்டாக் இணையதளத்தில் https://centacpuducherry.in பி.டெக் 2ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்க வேண்டும். இடம் கிடைத்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் அசல் சான்றிதழுடன் சேர வேண்டும். SHARE IT

Similar News

News September 9, 2025

புதுச்சேரி: மாவட்ட நிர்வாகம் முக்கிய தகவல்!

image

காரைக்கால் அரசு பொது மருத்துவ மனையில் வரும் வெள்ளிக்கிழமை (12.9.2025) அன்று புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து, மருத்துவ சேவைகளை வழங்க உள்ளார்கள். காரைக்கால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

News September 9, 2025

புதுவையில் எம்.எல்.ஏ நேரு முற்றுகை போராட்டம்

image

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை காமராஜர் வீதி, புது தெரு, முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை அருந்தி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

News September 9, 2025

புதுவை: போதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

image

கோட்டுச்சேரி வரிச்சிக்குடி மீனவர் மதி, மனைவி ஜெயப்பிரதா(40)
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்
சம்பவத்தன்று அதிக மது போதையில் மனைவிடம் ஏற்பட்ட தகராறில் நிதானமிழந்து கத்தியால் ஜெயப்பிரதாவை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வரிச்சிக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!