News November 3, 2025
புதுச்சேரி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், உதவியாளர், பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி அரசு துறையில் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Similar News
News November 3, 2025
புதுச்சேரி: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, SIR என்கிற சிறப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது. இது
(டிசம்பர் 4) வரை வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பார்கள். வாக்காளர்கள், பிறந்தநாள் ஆவணம், தொலைபேசி எண், தற்போதைய புகைப்படம் வைத்துக்கொள்ள வேண்டும். Form 6, Form 8 ஆகியவை தொகுதி மாறி உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.
News November 3, 2025
புதுச்சேரி: ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc போதுமானது, சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.11.2025 தேதிக்குள் <
News November 3, 2025
புதுச்சேரி: தொழில்நுட்ப வல்லுநர்கள் இடமாற்றம்

புதுச்சேரி, சுகாதாரத்துறை சார்பு செயலாளர் முருகேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் சுகாதாரத் துறையில், பணியாற்றி வரும் மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏழு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாகி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தர்மராஜ் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கும், அங்கு பணியாற்றி வந்த சுபா மாகி மருத்துவமனைக்கும் இடமாற்றம். மேலும் ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


