News August 31, 2025
புதுச்சேரி: வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்

புதுச்சேரி மாநிலம், NR காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜெயபால் அய்யனார் அவர்களுக்கு புதுச்சேரி அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V. ஆறுமுகம் இன்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தன.
Similar News
News September 1, 2025
புதுச்சேரி: அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் இளைஞர்களே நாகையில் உள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. செப் 18 முதல் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிகல், க்ளர்க் , பிரிவுகள் சேர்வதற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும். புதுவையை சேர்ந்தவர்கள் செப். 18 ஆம் தேதி கலந்துகொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே <
News September 1, 2025
புதுவையில் நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

சென்னை, வியாசர்பாடி கார்த்திக், தொழிலாளி. வேளாங்கண்ணியில் கொடியேற்றம் முடிந்து, நண்பர்களுடன் புதுவைக்கு வந்தார். அங்கிருந்து ஆரோவில் குயிலாப்பாளையம் தனியார் கெஸ்ட் அவுசில், 9 பேரும் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் அங்குள்ள நீச்சல் குளத்தில் நண்பர்கள் அனைவரும் குளித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கார்த்திக் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News September 1, 2025
புதுச்சேரி: துணை தாசில்தார் தேர்வு

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த மே 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு மொத்தம் 37,349 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் போட்டித்தேர்வு 101 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மையங்களில் தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வினை 37,349 பேர் எழுதினார்கள்.