News February 11, 2026

புதுச்சேரி: வாய்க்காலில் மிதந்த சடலம்

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை பெரிய வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 11, 2026

புதுச்சேரி: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

புதுவை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in <<>>என்ற இணையதளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்

image

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.12) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறாா். மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் பேரவையில் அவா் ஒப்புதல் கோருகிறாா்.

News February 11, 2026

புதுச்சேரி: இனி உங்கள் ஆதார் அட்டை வாட்ஸ் அப்பில்

image

புதுச்சேரி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே<<>> கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!