News May 16, 2024

புதுச்சேரி: வாகன வரிசை எண்கள் ஏலம்!

image

புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் பிஒய்-04 பி (ஏனாம்) வரிசையில் உள்ள எண்கள் பரிவாகன் இணையதளத்தில் மே 21 ஆம் தேதி வரை ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயா், கடவுச்சொல்லை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் ‘நியூ பப்ளிக் யூசா்’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு போக்குவரத்துத் துறை தொலைபேசி 0413-2280170ஐ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News November 4, 2025

புதுவை: சமூக ஆர்வலர்க்கு கொலை மிரட்டல்

image

புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோகுல் காந்திநாத். இவர் நேற்று முன்தினம் கொக்கு பார்க் அருகே தண்ணீர் குழாயில், தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே இறைச்சி கழிவுகள் கிடந்துள்ளது. உடனே அருகில், இருந்த இறைச்சி கடையில் இருந்த ஒருவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, டி.நகர் காவல் நிலையத்தில் கோகுல் புகார் அளித்துள்ளார்.

News November 4, 2025

புதுவை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

image

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – ரூ.12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க

News November 4, 2025

புதுவை: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

image

கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி ஆணையர் ஸ்ரீகிருஷ்ண மோகன் உப்புவிற்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரத் துறை கவனிப்பார். அரசு செயலர் முகமது ஹசன் அபித், உயர்கல்வி துறையை கூடுதலாக கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!