News December 9, 2025
புதுச்சேரி வரும் ரயில்கள் ரத்து

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மண்டல அதிகாரி வினோத் குமாா் நேற்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி – புதுச்சேரி பயணிகள் ரயில் திருப்பதியில் அதிகாலை தினமும் 4 மணிக்குப் புறப்படுகிறது. டிச.15-ஆம் தேதி இந்த ரயில் திருப்பதி – விழுப்புரம் இடையே மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி – எழும்பூா் பயணிகள் ரயில், டிசம்பர் 15ல் புதுச்சேரி விழுப்புரத்துக்கு இடையில் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.
Similar News
News March 4, 2026
புதுவை: சாலை விபத்தில் நீதிமன்ற ஊழியரின் மகன் பலி!

புதுவை வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டைச் சேர்ந்த நீதிமன்ற ஊழியர் ரேணுகாவின் மகன் ஜெயக்குமார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முருங்கப்பாக்கம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
News March 4, 2026
புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.