News September 22, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வேலை!

புதுச்சேரி மக்களே, டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10th,12th, Any டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.35,400 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <
Similar News
News September 22, 2025
வி.ஏ.ஓ. தேர்வுக்கான பதில்கள் வெளியீடு

புதுவை வருவாய்த்துறை சார்பில் 41 வி.ஏ.ஓ. பணிக்கு நேற்று எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான பதில்கள் அரசு ஆட்சேர்ப்பு இணையதளத்தில் இன்று (செப்.22) வெளியிடப்பட்டுள்ளது. செயல்முறை முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் அதே இணையதளத்தில் வெளியிடப்படும் என பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News September 22, 2025
புதுச்சேரியில் தேர்வாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

புதுச்சேரியில் சுகாதாரத்துறை பணி தேர்வானவர்களுக்கு செப்டம்பர் 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளது. மருந்தாளுநருக்கு செப்டம்பர் 24ல், இசிஜி வல்லுநர்களுக்கு செப்டம்பர் 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளருக்கு செப்டம்பர் 29ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மகப்பேறு சிகிச்சை உதவியாளர்களுக்கு செப்டம்பர் 30ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
News September 22, 2025
புதுச்சேரி: உரிமம் இன்றி நாய்கள் வளர்த்தால் அபராதம்!

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் நாய்கள் வெறி பிடிக்காமல் இருக்க வெறி நாய்கடி (ரேபிஸ்) தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணிகள், அடுத்த மாதம் முதல் நகராட்சி பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் வீடுகளில் நாய்களை வளர்ப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.