News October 24, 2025
புதுச்சேரி: ரூ.30,000 சம்பளத்தில்..ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு இங்கே <
இதனை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News October 25, 2025
புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (அக்.25) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
புதுச்சேரி: வங்கி சேவை தற்காலிகமாக நிறுத்தம்

புதுச்சேரியில் நாளை (25.10.2025) பாரத ஸ்டேட் வங்கியின் பராமரிப்பு பணிகள் காரணமாக இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை மதியம் 1.10 மணி முதல் 2.10 மணி வரை வங்கியின் உப்பி, IMPS, YONO, NEFT, RTGS ஆகிய இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM மற்றும் UPI லைட் சேவைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
காரைக்காலில்: மின் தொகை வசூல் மையம் இயங்கும்

காரைக்காலில் உள்ள மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு (25.10.25) சனிக்கிழமை நாளை காரைக்கால் நகரம் தலைமை அலுவலகம், நேரு நகர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு அலுவலகங்களில் மின் தொகை வசூல் மையம் காலை 8.45 முதல் மதியம் 1.00 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என்பதால் தங்களது மின் கட்டண பாக்கியினை உடனடியாக செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


