News December 28, 2025
புதுச்சேரி: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News January 2, 2026
புதுகை: பொங்கல் பரிசு ரூ.5000 வழங்க கோரிக்கை

புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தியில், “பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதற்கான ஆணையை முதல்வர் பிறந்திருக்கும் 2026 புத்தாண்டின் பரிசாக அறிவிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டிற்கு ரூ.5,000 வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.” என கோரியுள்ளார்.
News January 2, 2026
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News January 2, 2026
புதுவை: வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்

புதுவை டி.வி.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிகரன். இவரது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ரகசிய எண் அடுத்தடுத்து வந்துள்ளது. இதனை அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,45,583 பணத்தை சைபர் மோசடி கும்பல் திருடியுள்ளனர். இது குறித்து ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


