News July 11, 2024
புதுச்சேரி முதல் சேலம் வரை இருசக்கர வாகன பரப்புரை

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிடர் மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயண தொடக்க விழா இன்று புதுச்சேரி சாரம் அவ்வை திடல் ஜீவா சிலை அருகில் இருந்து தொடங்கியது. புதுச்சேரி முதல் சேலம் வரை நடைபெறும் இந்த இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி தொடங்கி வைத்தார்.
Similar News
News February 15, 2026
புதுச்சேரியில் வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பேரணி

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் PTDC இணைந்து ‘CISF வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பேரணி 2026’ இன்று (பிப்.15) காலை 6.00 மணிக்கு காந்தி திடலில் தொடங்கியது. இந்தியாவின் நீண்ட கடற்கரைப் பாதையை ஒட்டிச் செல்லும் இந்த பேரணி, கடலோரப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் தேசிய ஒற்றுமை என்பதை வலியுறுத்தும் நோக்குடன் நடத்தப்படுகிறது.
News February 15, 2026
புதுச்சேரி: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

புதுச்சேரி மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!
News February 15, 2026
புதுச்சேரி: அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது, பாதுகாப்பு வலயத்திற்குள் ஒரு ட்ரோன் அத்துமீறி பறந்தது. ஏற்கனவே அந்த பகுதி ‘நோ-ஃப்ளை ஜோன்’ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், NSG கமாண்டோக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ட்ரோன்-கன் மூலம் அதை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


