News October 16, 2024

புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் எவரும் இன்று முதல் 18 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறி கடலுக்கு சென்றால் அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்படும்.

Similar News

News September 14, 2025

புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் <>https://recruitment.py.gov.in<<>> என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க.!

News September 14, 2025

புதுவை: கடுமையான வயிற்று வலியால் தற்கொலை

image

புதுவை, கூடப்பாக்கம்பேட் கோபால் (65) இவருக்கு 3 வாரமாக கடுமையான வயிற்று வலி இருந்தது அவர் மகன் கோவிந்தன் அவரை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று கோவிந்தன் வேலைக்கு சென்ற நேரத்தில் வயிற்று வலியால் விரக்தியடைந்த கோபால் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த கோவிந்தன் அளித்த புகாரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 13, 2025

காரைக்காலில் ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை, கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை இணைப்பு சாலைக்கான முதற்கட்ட கல ஆய்வு பணிகளை ஆட்சியர் மேற்கொண்டார். இணைப்பு சாலைகளுக்கு தேவையான முன் கள ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தினார்.

error: Content is protected !!