News December 22, 2025

புதுச்சேரி: மீனவர்களின் குறைகளை கேட்ட மத்திய அமைச்சர்

image

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, பாஜக மாநில மீனவர் அணி தலைவர் மாரியப்பனுடன் புதுவை வம்பா கீரப்பாளையம் மீனவ கிராம மக்களை, நேற்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது புதுவை மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் உடன் இருந்தார்.

Similar News

News December 25, 2025

புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையில் முதலமைச்சர்

image

புதுச்சேரி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில், இன்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். திருப்பலிக்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். பின்னர், இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்களும் முதலமைச்சருக்கு ஆசீர்வாதம் வழங்கினர். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News December 25, 2025

புதுவை: பொங்கலுக்குள் பல்வேறு திட்டம்!

image

“தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை சுமார் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். பொங்கலுக்குள் இடைநிலை ஆசிரியர்கள், 256 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். மாணவர்களுக்கான லேப்-டாப் பொங்கலுக்குள் வழங்கப்படும். கல் வீடு கட்டும் திட்டத்துக்கு 1700 பேருக்கு பொங்கலுக்குள் முதல் தவணைத் தொகை தரப்படும். மத்திய அரசு நமக்கு கூடுதல் நிதியை தரவுள்ளது.” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

புதுச்சேரியில் மேலும் தடை நீட்டிப்பு

image

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட ரோடமைன் பி நிறமி கலந்த பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு மேலும் ஒரு ஆண்டுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட உத்தரவில், இத்தடை 2026 டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!