News March 18, 2025
புதுச்சேரி மின்துறையில் 73 பேருக்கு வேலைவாய்ப்பு

புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வகுப்பு வாரியாக பொது-30, OBC -8, MBC -13, EBC -1, BCM -1, SC -12, ST -1, EWS -7, மாற்றுத் திறனாளிகள் -3 என மொத்தம் 73 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31 ஆகும். இதுகுறித்து மேலும் அறிய <
Similar News
News August 29, 2025
புதுச்சேரியில் நாளை பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நாளை 30ந்தேதி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW
News August 29, 2025
பாண்டி: 42 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ரயில்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாரில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்லும் நிகழ்ச்சியில் இன்று புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தலைவர், புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திருநள்ளாறு ரயில் நிலையம் வந்த பயணிகள் ரயிலை வரவேற்றனர்.
News August 29, 2025
புதுச்சேரி: பொதுநல அமைப்புகள் போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரி மின்துறை தனியார் மையம் ஆக்கப்பட்டு பங்கு சந்தையில் அதானி எலக்ட்ரிசிட்டி புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்பு தலைவர்கள் தலைமை மின்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு அதிகாரியிடம் கேட்டறிந்தனர். மக்களுக்கு விரோத செயலில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அரசு எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பொதுநல அமைப்புகள் தெரிவித்தனர்.