News September 27, 2025

புதுச்சேரி: மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி!

image

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் உலக சுற்றுலா தினம் 2025 நிகழ்ச்சி, காரைக்கால் கடற்கரையில் சனிக்கிழமை (27.09.2025) மாலை மிகப் பிரமாண்டமான முறையில், பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீ நிவாஸ், யோக ஸ்ரீ மற்றும் பல்வேறு பிரபலங்கள் பங்கு பெறும் இசைக்குழு வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Similar News

News February 4, 2026

புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 4, 2026

புதுச்சேரி: வாலிபர் அடித்துக் கொலை!

image

புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் பகுதியில், நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோரிமேடு போலீசார், வாலிபரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 4, 2026

புதுவை: கோயில் வாயிலில் கொடூர கொலை

image

வில்லியனூர் திருக்காஞ்சி பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் வாசல் முன்பு அங்கு தங்கி பிச்சை எடுத்து வந்த அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர், மர்ம நபர்களால் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்து சென்ற வில்லியனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கொலையாளி யார்? எதற்காக இந்தக் கொலை நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!