News December 17, 2025
புதுச்சேரி மாநில காவல்துறை மாநாடு

புதுவை மாநில காவல் துறை மாநாடு இன்று ராஜீவ்காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். முதல்வர், மாநாட்டை குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்து மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
Similar News
News December 19, 2025
புதுவை: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
News December 19, 2025
புதுவை: போலியோ சொட்டு மருந்து முகாம் அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் டிசம்பர் 21-ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் 74,698 குழந்தைகள் பயனடைவார்கள். மொத்தம் 425 முகாம்களிலும், பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பூங்கா, கோவில், வணிக வளாகம் உள்ளிட்ட 31 பொது இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படும் என புதுச்சேரி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
News December 19, 2025
புதுவை: அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி!

புதுச்சேரி தொழிலாளர் துறைச் செயலர் ஸ்மித்தா, “புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம், அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://labour.py.gov.in இணையத்தில் உள்ள படிவத்தை இன்று (டிச.19) காலை 9:30 மணி முதல் வரும் 28-ம் தேதி மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.” என கூறியுள்ளார்.


