News September 18, 2025

புதுச்சேரி: மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

image

புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலை ஓட்டுநர் வில்லியனூர் ஒதியம்பட்டு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலிசார் வழங்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

image

பதினைந்தாவது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று 18ஆம் தேதி வியாழக்கிழமை சட்டப்பேரவையின் மைய மண்டபத்தில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

News September 18, 2025

புதுச்சேரி: ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு

image

புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை சார்பாக சேவா பகவாடா மாணவர்களுக்கான ரேபிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏம்பலம் அரசு மறைமலை அடிகள் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை மற்றும் வேளாண் துறை செயலர் யாசின் சவுத்ரி கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து ரேபிஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையெட்டை துறை செயலர் வெளியிட்டார்.

News September 18, 2025

புதுச்சேரியில் மத்திய அரசு திட்ட துவக்க விழா!

image

ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் சுவஸ்த்ய நாரி சக்த் பரிவார் அபியான் என்கிற புதிய திட்டத்தை பாரத பிரதமர் மோடி அறிவித்து துவக்கி உள்ளார். கம்பன் கலையரங்கில் இந்த திட்டத்தின் துவக்க விழா நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!